திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.39 திருக்ஷேத்திரக்கோவை
பண் - இந்தளம்
ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்
வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல்நின்றி யூர்குன்றியூருங்
குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும்
பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே.
1
அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா
றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்
பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும்
பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்
பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
கடல் நீந் தலாங் காரணமே.
2
அட்டா னமென் றோதியநா லிரண்டும்
அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்
எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங்
குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
அரும்பா வங்களா யினதேய்ந் தறவே.
3
அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்
பொடிப்பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப்
பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்
விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி
உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே.
4
ஆறை வடமா கறலம்பர் ஐயா
றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறை துலைபுக லூரக லாதிவை காதலித்தா
னவன் சேர்பதியே......(*)

(*) இச்செய்யுளின் மீதமுள்ள அடிகள் சிதைந்து போயின.
5
மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
இனவஞ் சொலிலா இடைமா மருதும்
இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்
கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
தவமாம் மலமா யினதா னறுமே.
6
மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம்
முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்
கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்
கொடுங்கோ வலூர்திருக் குணவாயில்(*)

(*) இச்செய்யுளின் மீதமுள்ள அடிகள் சிதைந்து போயின.
7
(*)குலாவு திங்கட் சடையான்
குளிரும் பரிதி நியமம்
போற்றூ ரடியார் வழிபா டொழியாத்தென்
புறம்பயம் பூவணம் பூழியூருங்
காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
நெரித்தா னுறைகோயிலென்றென்று நீகருதே.

(*) இச்செய்யுளின் சில அடிகள் சிதைந்து போயின.
8
நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்
நளிர்சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த
கடல்வண் ணனும் மாமல ரோனுங்காணாச்
சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்
குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே.
9
குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்
குருந்தங் குடிதே வன்குடி மருவும்
அத்தங் குடிதண் டிருவண் குடியும்
அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த
நித்தன் நிமலன் உமையோ டுங்கூட
நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்
புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே.
10
அம்மா னையருந் தவமாகி நின்ற
அமரர் பெருமான் பதியான வுன்னிக்
கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்
கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்
இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் மடியார்
விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே.
11
இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர், வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், நெடுவாயில், உஞ்சேனை மாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி, மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித் தேவாரமில்லையாதலால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com